Available 7 Days A Week

Risk Vacation Self-Study

COVID-19 தொற்று நோய் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இத் தருணத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்கும் ஆர்வத்தை வளர்ப்பதின் ஊடாக இவ் இடர்காலத்தில் மாணவர்களின் அறிவு விருத்தியில் நாம் அக்கரை செலுத்துவோம்.

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் செய்தி

***********************************************
“இரண்டாம் தவணைப் பாடப்பரப்பினை #npteachers உள்ளடக்கிய சுயகற்றல் கையேடுகள் மாகாணக் கல்வித் திணைக்கள இணையத்தளத்தில் சுயகற்றல் கையேடுகள் என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கான இச் சுயகற்றல் கையேடுகளை பாட ஆசிரியர்கள் தரவிறக்கம் செய்து தங்கள் மாணவர்களுக்கு வைபர், வட்ஸ்அப் போன்றவற்றின் ஊடாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

COVID -19 உடன் போராடியடி தங்கள் வாழ்க்கைப் பாதையினைத் தொடர உலக
https://www.facebook.com/TeachersNP/
நாடுகள் தயாராவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. COVID-19 முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் வரை நாம் முதலாம் தவணைக்கான மீட்டல்களுடன் மட்டும் நின்றுவிடாது அடுத்த கட்ட செயற்பாடுகளில் ஆர்வம் காட்டுவதே பொருத்தமானது எனக் கருதுகின்றேன்.

குறித்த பாடசாலையின் ஆசிரியர்களினால் அனுப்பி வைப்பவற்றை மட்டுமே ஆர்வத்துடன் மாணவர்கள் செய்வதனை அவதானிக்க முடிகின்றது. எனவே ஒவ்வொரு ஆசிரியரும் தங்களால் இயன்றளவு பொருத்தமான கற்றல் கையேடுகளைத் தங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இதுவரை இவ்வாறான அர்ப்பணிப்புடன் பல ஆசிரியர்கள் பல கற்றல் கையேடுகளைத் தயாரித்து தங்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வருவதை அவதானிக்கின்றேன். இவ்வாறான அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கு எனது பணிவான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தங்கள் பணிகள் தொடரட்டும்.

மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் பல்வேறு https://www.facebook.com/TeachersNP/ செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் . எமது பணிகளை மேலும் மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம். எனது முகநூல் உள்பெட்டியில் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.”

👉🏽 web address : edudept.np.gov.lk
👉🏽 my email address : manimarrphan@gmail.com

திரு -K. Manimarrphan (பிரதிக்கல்விப்பணிப்பாளர், மா.க.தி /வடக்கு)

சிறுவர் பாடல்கள்

அம்மாவின் அன்பு...

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா

புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்
பூவுஞ் சூட்டும் அம்மா
அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா

பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்
தோளிற் போடும் அம்மா

பாப்பா மலர்ப் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் துாக்கும் அம்மா.

இளமைப்பருவம்...

இளமைப்பருவம் இனிய பருவம்
எழுச்சி நல்கும் பருவம்
விளையும் அன்பும் தொண்டும் வாழ்வில்
விருந்து செய்யும் பருவம்

மலையைத் தூக்கி தலையில் வைக்க
மார்பு தட்டும் பருவம்
கலைகள் கற்று புலமையாலே
கருத்து மலரும் பருவம்

நாட்டை மொழியை அடிமை ஆக்க
நாங்கள் இங்கு வாழ்வோம்
ஈட்டி முனையில் உயிரைக் கொடுப்போம்
என்றெழும்பும் பருவம்

இன்னல் கோடி வாழ்வில் வந்து
எதிர்த்து நின்ற போதும்
தன்னை லத்தைப் பேணி டாத
சால்பு கொண்ட பருவம்

சென்ற கால நிகழுங் காலச்
செயல்கள் யாவும் தேர்ந்தே
என்று வாழும் எதிர்காலத்தை
இயற்றும் இளமைப் பருவம்

இனிய மொழிகள்...

இனிய மொழிகள் பேசி நீங்கள்
இன்பம் எய்த வேண்டும்
கனியைத் தின்று மகிழும் இன்பம்
கண்டு வாழ வேண்டும்

எல்லோருக்கும் இன்பம் ஈதல்
இனிய மொழியால் ஆகும்
நல்ல அன்பும் நண்பும் புகழும்
நன்மை வந்து சேரும்

அல்லல் அகலும் செல்வம் குவியும்
அருளும் சுரந்து பாயும்
நல்ல இனிய மொழிகள் கூறி
நாங்கள் சேர்ந்து வாழ்வோம்

ஊஞ்சல் ஆடுவோம்...

ஊஞ்சல் கட்டி ஆடுவோம்
ஊஞ்சல் கட்டி ஆடுவோம்
உயர மான மரத்திலே
ஊஞ்சல் கட்டி ஆடுவோம்

வலித்து மேலே ஏறுவோம்
வந்து கீழே சேருவோம்
குலுக்கி மரத்தை ஆடுவோம்
குருவி நுழைந்தும் ஓடுவோம்

கூடிக் கூடி ஆடுவோம்
கும்மி கொட்டிப் பாடுவோம்
தேடி வந்த சேயுடன்
சேர்ந்து ஊஞ்கல் ஆடுவோம்

தம்பி வந்து பாரெடா
தமிழும் ஊஞ்சல் ஆடிறாள்
வெம்பி வெம்பி அழுதவள்
மெத்தப் புளுகாய் ஆடிறாள்

எண்ணிப் பத்து முறைக்குமேல்
இருந்து கண்ணன் ஆடிறான்
கண்ணீர் விட்டுக் கதறுவாள்
கமலராணி ஆடட்டும்

எங்கள் வீட்டுப் பூனை ...

சின்னச் சின்னப் பூனை
சிறந்த நல்ல பூனை
என்னைப் பார்த்துத் துள்ளும்
எங்கள் வீட்டுப் பூனை

வட்ட மான கண்கள்
வண்ண மான செவிகள்
கட்டை யான கால்கள்
காட்டும் நல்ல பூனை

பாலைக் குடிக்கப் பார்க்கும்
பதுங்கி இருக்கும் பரணில்
வாலைப் பற்றி இழுத்தால்
வளைந்து கையைக் கடிக்கும்.

நாயைப் பார்த்துச் சீறும்
நகத்தால் மரத்தைக் கீறு
பாயப் பதுங்கி ஓடும்
பந்தை உருட்டி ஆடும்

எலியைக் கிளியைப் பிடிக்கும்
ஏறி மரத்தில் நடிக்கும்
புலியைப் போல இருக்கும்்
புள்ளிக் கோட்டுப் பூனை

உண்ணுஞ் சோறும் பாலும்
ஊட்டி வளர்த்த பூனை
கண்ணைப் போன்ற பூனை
கட்டிக் கரும்புப் பூனை

குயில்...

கூகூ கூகூ கூகூ என்று
கூவிக் கீதம் பாடுவேன்
கூடி வாழும் சோடிக் குயிலைக்
கூவிக் கூவித் தேடுவேன்

காகம் என்று நீங்கள் என்னைக்
கருதிக் கொள்ள வேண்டாம்
காதில் இனிக்கக் கூவும் குரலால்
கண்டு கொள்வீர் என்னை

பார்க்க நானும் கறுப்பு நிறந்தான்
பாடும் குரலைக் கேளும்
பாலும் தேனும் கரம்பும் போலப்
பாடும் குரலைக் கேளும்.

காகக் கூட்டில் முட்டை இடுவேன்
காகம் குஞ்சு பொரிக்கும்
காலஞ் செல்ல எனது குஞ்சு
கனிந்த குரலில் கூவும்

கூவுங் குரலைக் கேட்ட காகம்
குஞ்சைக் கொத்திக் கலைக்கும்
கூவிக் கூவி எனது குஞ்சு
கூட்டை விட்டு பறக்கும்

குஞ்சை நானும் கூட்டிக் கொண்டு
கூவிக் கூவித் திரிவேன்
கூகூ கூகூ கூகூ என்று
கூவிக் கூவித் திரிவேன்

காகக் கூட்டில் முட்டை இட்ட
கள்ளக் குயிலோ நானும்
கல்லும் கனியக் கூவும் குரலைக்
காது கொடுத்துக் கேளும்

பந்தடிப்போம் நாங்கள்...

பந்தடிப்போம் பந்தடிப்போம்
பந்தடிப்போம் நாங்கள்
பாய்ந்துதுள்ளி ஓடிஆடிப்
பந்தடிப்போம் நாங்கள்

எங்கள்பக்கம் வெற்றிகொள்ளும்
என்றெதிர்த்துக் கூறி
எதிரெதிராய் நின்றுபந்தை
எடுத்தெறிந்து மாறிப்-பந்தடிப்போம்

உச்சிவானில் உயரும் பந்தை
ஓடிக்கையால் ஏந்தி
அச்சமின்றி எவர்வரினும்
ஆர்ப்பரித்துப் பாய்ந்து-பந்தடிப்போம்

வந்தபந்தை மறித்தடித்து
மற்றப்பக்கம் போக்கி
மண்டியிட்டுக் கைகளினால்
மாற்றுப்பந்தைத் தாக்கிப்-பந்தடிப்போம்

விழுந்துயர்ந்த பந்தைத்தட்டி
வீரமுடன் கூடி
வெற்றிவெற்றி யென்றுசொல்லி
வெற்றிப்பாட்டுப் பாடிப்-பந்தடிப்போம்

பாட்டி...

அன்பு நிறைந்த பாட்டி என்னை
அணைத்துத் துாக்கும் பாட்டி
இன்ப மான கதைகள் எல்லாம்
எனக்குச் சொல்லும் பாட்டி

வாழைப் பழமும் இனிப்பும் என்க்கு
வாங்கித் தந்த பாட்டி
தோளிற் கிடத்தி முதுகைத் தடவித்
துாங்க வைக்கும் பாட்டி

பள்ளிக் கூடப் பாடம் வீட்டில்
படிக்கச் சொல்லும் பாட்டி
துள்ளிக் குதித்து மண்ணில் வீழ்ந்தால்
துடைத்துக் கழுவும் பாட்டி

கோவிலுக்குப் போகும் போது
கூட்டிச் செல்லும் பாட்டி
கும்பிடுநீ கும்பி டென்று
குனிந்து சொல்லும் பாட்டி

அப்பா அம்மா அடிக்க வந்தால்
அலறித்தடுக்கும் பாட்டி
தப்பாய் நானும் பிழைகள் செய்தால்
தானே புலம்பும் பாட்டி

அவ்வைப் பாட்டி பாடித் தந்த
ஆத்தி சூடிப் பாட்டை
செவ்வையாகப் பாடச் சொல்லிச்
சிந்தை மகிழும் பாட்டி.

புள்ளிக் கோழி...

புள்ளிக் கோழி எங்கள் கோழி
பொரித்த குஞ்சு பத்து
வெள்ளைக் குஞ்சு மூன்று நல்ல
வெடிவால் குஞ்சு ஏழு

கொக்கொக் கொக்கோ என்று குஞ்சைக்
கூட்டிக் கொண்டு திரியும்
பக்கத் திலே காகம் வந்தால்
பறந்து பறந்து கலைக்கும்

தம்பிக் குஞ்சு சத்தம் போட்டால்
தலையைத் தூக்கிப் பார்க்கும்
குப்பை கிளறிப் புச்சி புழுக்கள்
கொத்தித் தின்னக் கொடுக்கும்

காற்றுக் கிளைகள் ஆடினாலும்
காதைக் கொடுத்துக் கேட்கும்
சோற்றைப் போட்டால் குஞ்சைக் கூவிச்
சொண்டால் கிளறிக் காட்டும்

வட்டமிட்டுப் பருந்து வந்து
வானத் திலே பறந்தால்
செட்டைக் குள்ளே குஞ்சை வைத்துத்
தெய்வம் போலக் காக்கும்

மயில்...

மழை முகிலுங் கூடுது
வண்ண மயிலும் ஆடுது
அழகுத் தோகை விரித்து நின்று
ஆனந்தமாய் ஆடுது

நீலத்தோகை பொன் சொரிய
நின்று கூத்துப் போடுது
நீண்ட காலைத் தூக்கி மயிலும்
நின்று கூத்துப் போடுது

கோல மயிலின் கூத்தைக் கண்டு
குரங்கு தாளம் போடுது.
கொப்புக் கொப்பாய்த் தாவிப் பாய்ந்து
குரங்கு தாளம் போடுது.

வானம் பாடி மயிலின் கூத்தை
வாழ்த்திப் பாட்டு பாடுது
வண்ணக் கிளியும் வந்திருந்து
மயிலின் கூத்தைப் பார்க்குது

மானும் புலியின் பக்கம் நின்று
மயிலின் கூத்தைப் பார்குது
மலைறைப் போல யானை நின்று
மயிலின் கூத்தைப் பார்க்குது.

நஞ்சைக் கக்கும் நாகபாம்பு
நடிக்கும் மயிலைப் பார்க்குது
அஞ்சிப் புற்றில் ஒளித்திடாமல்
அருகில் நின்று பார்க்குது.

கொல்லும் வேடன் வில்லும் நழுவக்
கூத்தைப் பார்த்துக் களிக்கிறான்
குறத்தி மயிலின் கூத்தைக் கண்டு
குதித்துக் குதித்துக் நடிக்கிறாள்.

வெண்ணிலா...

பாலைப் போல வெண்ணிலா
பார்க்க நல்ல வெண்ணிலா
கோல வானில் நின்றொளியைக்
கொட்டு கின்ற வெண்ணிலா

வெள்ளிக் கூட்டம் சுற்றி நிற்க
விளங்கு கின்ற வெண்ணிலா
அள்ளி அள்ளிச் சோற்றையுட்டி
அம்மா காட்டும் வெண்ணிலா

கரிய முகிலுள் ஒளித்துக்
கள்ளம் பழகும் வெண்ணிலா
தெரியவில்லை என்று தம்பி
தேடிச் சிணுங்கும் வெண்ணிலா

கலா தம்பி காந்தியோடு
கையைக் கோர்த்துக் கொண்டு
நிலா நிலா என்று கூவி
நின்று துள்ளும் வெண்ணிலா

தரம் 05 மாணவர்களுக்கு

மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்படும்; தரம் 05 மாணவர்களுக்கான மாதாந்த மாதிரிப் புலமைப்பரிசில் பரீட்சைத் தொடரின் அடுத்த பரீட்சை இயங்கு நிலை இணைய வழிப் பரீட்சையாக (LMS) நடத்துவதற்கு ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. முதலில் பகுதி -1 க்கான பரீட்சை நடைபெறும். பரீட்சை நடைபெற்று முடிந்ததும் புள்ளிகளையும், சரியான விடைகளையும் பின்னூட்டல்களையும் பெறும் வகையில் இப் பரீட்சை முறை திட்டமிடப்படுகின்றது. எனவே மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம

வழி II:
 
 

தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பின் பின்வரும் முறைகளில் எம்மை தொடர்புகொள்ளலாம்:

    • Email – event@yarlithub.org
    • Phone /Whatsapp: 0767 673 158
நன்றி,
மாகாணக் கல்வித் திணைக்களம் – வடமாகாணம்

Available 7 Days A Week

Let’s Study

இம்முறை க.பொ.த (உ.த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பல்தேர்வு வினாக்கள் உள்ளடக்கப்பட்ட பாடங்களுக்குரிய பல்தேர்வு வினாக்களுக்கான மாதிரிப் பரீட்சைகள் இயங்கு நிலை இணைய வழிப் பரீட்சையாக (LMS) நடத்துவதற்கு ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் புதன்கிழமை (29.04.2020) அன்று நேரசூசி வெளியிடப்படும். அதனடிப்படையில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. பரீட்சை நடைபெற்று முடிந்ததும் புள்ளிகளையும், சரியான விடைகளையும் பின்னூட்டல்களையும் பெறும் வகையில் இப் பரீட்சை முறை திட்டமிடப்படுகின்றது. எனவே மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – இடர் விடுமுறைக்கால சுயகற்றலுக்கான செயலட்டை 2020 (தமிழ் & ஆங்கில மொழி மூலம்)

*தரம் 06*
http://www.jhc.lk/risk-holiday-self-education-worksheet-grade-06/

*தரம் 07*
http://www.jhc.lk/risk-holiday-self-education-worksheet-grade-07/

*தரம் 08*
http://www.jhc.lk/risk-holiday-self-education-worksheet-grade-08/

*தரம் 09*
http://www.jhc.lk/risk-holiday-self-education-worksheet-grade-09/

*தரம் 10*
http://www.jhc.lk/risk-holiday-self-education-worksheet-grade-10/

*தரம் 11*
http://www.jhc.lk/risk-holiday-self-education-worksheet-grade-11/

*தரம் 12*
http://www.jhc.lk/risk-holiday-self-education-worksheet-grade-12-2021/

*தரம் 13*
http://www.jhc.lk/risk-holiday-self-education-worksheet-grade-13-2020/

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய செயலி அறிமுகம்

*Fullstact App* (For Education)
(Only Android Mobile & PDF File download Totally free)

https://play.google.com/store/apps/details?id=lk.kingsinoworld.fullstack

இதில் நீங்கள் நாளாந்தம் பதிவேற்றப்படும்
👩‍🎓 *1-13 வகுப்பு தவணை வினாத்தாள்கள்*
👩‍🎓 *1-13 வகுப்பு மாதிரி வினாத்தாள்கள்*
👩‍🎓 *1-13 வகுப்பு அலகு ரீதியான வினாத்தாள்கள்*
👩‍🎓 *1-13 வகுப்பு பாடக்குறிப்புகள்*
👩‍🎓 *Scheme and Lesson Plan*
👩‍🎓 *Teachers circular*
👩‍🎓 *Competitive Exam Papers*
போன்றவற்றை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*App செயன்முறை* 👇👇👇👇👇👇
https://drive.google.com/file/d/1Ns0ZeBO7byhBIuE9215FSBOO7ih18eWy/view?usp=drivesdk

GCE O/L மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் – கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டது

இலங்கை கல்வயிமைச்சினால் எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டுள்ளது. இந்த வினாத்தாள்களை கீழே உள்ள இணைப்புக்களில் சென்று தரவிரக்கம் செய்து கொள்ள முடியும். 
 

ஆசிரியர்_நூல்கள்

ஆசிரியர் பணியில் இருக்கும் அன்பு நண்பர்களுக்கு..

நீங்கள் செய்வது மகத்தான காரியம். ஒரு தலைமுறையையே செதுக்குகின்றீர்கள். ஏற்கனவே நிறைய வாசிப்பீர்கள் என நம்புகிறேன். இந்த லொக் டவுண் காலத்தில் இன்னும் கொஞ்சம் Nஅதிகமாக Pகல்வி Tசார்ந்த நூல்களை Eவாசியுங்கள். Aகல்வி Cபோதனையில் Hசமகாலத்தில் Eஉலகில் Rநடைபெறும் Sமாற்றங்கள், பல நாடுகளில் கல்வியை எப்படி நடைமுறைபடுத்துகின்றார்கள், நம் நாட்டில் உள்ள சிக்கல்கள் என்ன?, மாணவர்களின் உளவியல், தொழில்நுட்பத்தினை எவ்வாறு திறம்பட பாடம் சொல்லித்தரா பயன்படுத்தலாம், வகுப்பறை அரசியல் என்ன? கல்வியில் என்ன அரசியல்? எது தேவையான விஷயங்கள் என நிறைய வாசியுங்கள்.

வரும் கல்வியாண்டில் உங்கள் வகுப்பில் ஒரு சின்ன பரிசோதனையை ஆரம்பியுங்கள் அது எவ்வளவு #npteachers சின்னதாகவும் இருக்கலாம் . பரிசோதனைகள் இல்லாத வகுப்புகள் ஆசிரியருக்கு சலித்துவிடும். வகுப்புகள் இயந்திரத்தனமாகிவிடும். பயணிக்கும் பாதையை ஒருமுறை பரிசீலிக்கவும்.

அடுத்த தலைமுறையினரின் சிந்தனை போக்கினை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் இருக்கும் நீங்கள் இதனை நிச்சயம் பரிசீலனை செய்வீர்கள்.

ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் என நான் கருதுபவையும் நான் வாசித்தவையும்.

1. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் – ஜான் ஹோல்ட்
2. டோட்டோ சான் – ஜன்னலில் ஒரு சிறுமி
3. பகல் கனவு – ஜிஜுபாய் பதேக்கா
4. வன்முறையில்லா வகுப்பறை – ஆயிஷா நடராசன்
5. இது யாருடைய வகுப்பறை ? ஆயிஷா நடராசன்
6. கல்வி ஓர் அரசியல் – வசந்தி தேவி
7. என்னை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க – ஷாஜகான் – வாசல் பதிப்பகம்
8. முதல் ஆசிரியர் – சிங்கிஸ் அய்மாத்தவ்
9. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – ஷ.அமனஷ்வீலி
10. பாகுபடுத்தும் கல்வி – வசந்தி தேவி
11. ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் – பி.ச.குப்புசாமி – விஜயா பதிப்பகம்
12. டேஞ்சர்: ஸ்கூல் ! சமகால கல்விகுறித்த உரையாடல்
13. கரும்பலகையில் எழுதாதவை – பழ.புகழேந்தி
14. ஆயிஷா – ஆயிஷா நடராசன்
15. தமிழக பள்ளிக் கல்வி – SS.ராஜகோபாலன்
16. வகுப்பறைக்கு npteachers வெளியே – இரா.தட்சணாமூர்த்தி
17. எனக்குரிய இடம் எங்கே? – சா.மாடசாமி
18. என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா – ச. மாடசாமி
19. தமிழக பள்ளிக் கல்வி – பிரச்சனைகளும் தீர்வுகளும்
20. பள்ளிகளில் பாகுபாடு – தமிழில் கோச்சடை
21. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் – பெ.தூரன்
22. ஆசிரிய முகமூடி அகற்றி
23. கற்க கசடற – பாரதி தம்பி
24. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி
25. தமிழகத்தில் கல்வி – காலச்சுவடு பதிப்பகம்
26. வகுப்பறையின் கடைசி நாற்காலி. ம.நவின் – புலம் பதிப்பகம்
27. ஆக்கவிய ஆசிரியம் – Rajendran Thamarapura

Copied Tharsan Sir